விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்களிடையே பிரபலமடைந்துள்ள "புஷ்பா'' விநாயகர் சிலை!


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்களிடையே  பிரபலமடைந்துள்ள புஷ்பா விநாயகர் சிலை!
x

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ‘புஷ்பா’ விநாயகர் சிலை பிரபலமடைந்துள்ளது.

சென்னை,

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 'புஷ்பா' விநாயகர் சிலை பிரபலமடைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் பொது இடங்களில் மற்றும் வீடுகளில் அமைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுவது வழக்கம். பின்னர் அந்த சிலைகள் கடல் மற்றும் ஆறு குளங்களில் கரைக்கப்படும்.

கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா தெலுங்கு படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாள மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர்.

இந்நிலையில், 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன் செய்த ஸ்டைலில், அது போன்ற சைகையுடன், விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெள்ளை நிற ஆடை அணிவிக்கப்பட்ட விநாயகர், 4 கைகளுடன் ஒரு மரக் கட்டையில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். இந்த விநாயகர் சிலை மக்களை கவர்ந்திழுக்கிறது.


இது மட்டுமன்றி ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பிடித்த நடிகர்கள் ராம்சரன் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகியோரது கதாபாத்திரங்களை போன்றும் இன்னும் பல்வேறு விதத்தில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


Next Story