மனிதர்களை கட்டிப்பிடித்து அரவணைத்து ஒரு மணி நேரத்தில் ரூ.7 ஆயிரம் சம்பாதிக்கும் இளைஞர்!


மனிதர்களை கட்டிப்பிடித்து அரவணைத்து ஒரு மணி நேரத்தில் ரூ.7 ஆயிரம் சம்பாதிக்கும் இளைஞர்!
x

மனிதர்களை கட்டிப்பிடிப்பதை தொழிலாக செய்து, இளைஞர் ஒருவர், ஒரு மணி நேரத்தில் ரூ.7 ஆயிரம் வருமானம் ஈட்டி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டாவா,

மனிதர்களை கட்டிப்பிடிப்பதை தொழிலாக செய்து, இளைஞர் ஒருவர், ஒரு மணி நேரத்தில் ரூ.7 ஆயிரம் வருமானம் ஈட்டி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவை சேர்ந்த 30 வயது இளைஞரான டிரெவர் ஹூடன் என்பவர் கட்டிப்பிடி சேவை நிறுவனத்தை நடத்தி வருகிறார். எம்பிராஸ் கனெக்‌ஷன் என்பது அவரது நிறுவனத்தில் பெயர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், கட்டிப்பிடி சிகிச்சை, இணைப்புப் பயிற்சி மற்றும் மசாஜ் செய்யப்படுகிறது.

"முன் பின் அறிமுகமில்லாத ஒருவர், தன்னைக் கட்டிப்பிடிப்பதில் யாருக்கும் உடன்பாடு இருக்காது, கூச்சப்படுவார்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால், என்னை சந்திக்கும் முன் 'அன்பு, அக்கறை காட்ட, அரவணைக்க நமக்கு ஒரு மணி நேரம் இருக்கிறதா? அது நம்மை எவ்வாறு உணரவைக்கும்?' என தங்களுக்குத் தாங்களே அவர்கள் கேட்டுக் கொள்ள வேண்டும்" என்கிறார் அவர்.

தொழில்முறை அரவணைப்பாளர் என தன்னை சமூகவலைதளங்களில் குறிப்பிடும் அவர், தன்னுடைய ஒரு மணி நேரப் பணிக்கு 75 பவுண்ட் கட்டணம் வசூலிக்கிறார். இந்திய மதிப்பில் இது ரூ.7000 ஆகும்.

கட்டிப்பிடிப்பதற்கு இவ்வளவு கட்டணமா என ஆச்சர்யப்படுபவர்களிடம், 'இந்தக் கட்டிப்பிடி சிகிச்சை மூலம் பல வகையில் மக்களின் மன வாழ்வு மேம்படுத்துவதாகக் கூறுகிறார்.

மனித தொடர்புகள் பற்றிய நீண்ட ஆராய்ச்சிப் பின்னர், அரவணைப்பதில் நிபுணத்துவம் பெற்றதாலேயே இதனை தனக்கு வருமானம் தரும் பணியாக மாற்றிக் கொண்டதாகக் கூறும் அவர், 'இந்த அரவணைப்பு தெரபி பற்றி இன்னமும் மக்களிடம் விழிப்புணர்வு தேவை, பலர் இதனை பாலியல் தொழில் என தவறாகப் புரிந்து கொள்கின்றனர்' என்றார்.

பல நாடுகளில் கட்டிப்பிடி வைத்தியம் புழக்கத்தில் உள்ளது. மன அழுத்தத்தைக் குறைக்கும் என்பதை அறிந்தோ, அறியாமலோ, தங்களுக்கு நெருக்கமானவர்களைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது, ஆறுதல் கூறுவது போன்ற உணர்ச்சிகளை மனிதர்கள் வெளிப்படுத்துகின்றனர். ஆனால் இதையே தற்போது தொழிலாக மாற்றி விட்டார் இந்த இளைஞர்.


Next Story