மெதுவாக நடைபோடும் 'அசையாக்கரடி'


மெதுவாக நடைபோடும் அசையாக்கரடி
x

தென்அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா பகுதிகளில் வசிக்கும் அரியவகை விலங்கினத்தில் ஒன்று, ‘அசையாக்கரடி’ இதனை ஆங்கிலத்தில் ‘ஸ்லோத்’ (Sloth) என்று அழைப்பார்கள்.

இந்த கரடி இனங்களில் இரண்டு வகையானவை உள்ளன. ஒன்று, மூன்று விரல்கள் கொண்டது. மற்றொன்று, இரண்டு விரல்கள் கொண்டது.

மூவிரல் அசையாக் கரடியை விட, இருவிரல் அசையாக்கரடி கொஞ்சம் பெரியதாகவும், கொஞ்சம் விரைவாகவும் நகரும். இந்த இரண்டு இனங்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு எதுவும் இல்லை. இந்த அசையாக் கரடி, இரவில் மட்டுமே தன்னுடைய இரையைத்தேடும்.

இது ஒரு தாவர உண்ணி என்றாலும், பூச்சி மற்றும் பல்லிகளையும் இவை உண்பதால் 'அனைத்துண்ணி' இனமாகவும் கருதப்படுகிறது. இந்தக்கரடி ஒரே இடத்தில் பல மணி நேரங்கள் கூட அசையாமல் இருக்கும் திறன்பெற்றவை. அதோடு இவற்றால் மிகமிக மெதுவாகவே நடக்க இயலும். இதன் உடல் இயக்கமும் மெதுவானதே, இந்த அசையாக் கரடியின், வயிறு மெதுவாகத்தான் இயங்கும். இதன் காரணமாக இவை உண்ட உணவு செரிமானம் ஆக, ஒரு மாதம் கூட ஆகலாம். மெதுவாக நகரும் செயல்பாட்டால், இந்தக் கரடி இனம் பிற விலங்குகளால் அதிகமாக வேட்டையாடப்படுகிறது.

இதன் காரணமாக இந்தக்கரடி அதிக நேரம் மரங்களின் மேலேயே அசைவின்றி இருக்கும். கழிவுகளை வெளியேற்றுவதற்காக மட்டுமே அவை, கீழே இறங்கும். தன்னுடைய கழிவுகளை ஒரே இடத்தில் மட்டுமே வெளியேற்றும் வித்தியாசமான பழக்கம் கொண்டது. இந்த அசையாக்கரடி.


Next Story