நமீபியாவில் இருந்து இந்தியா கொண்டு வரப்படும் சீட்டாக்கள்...


நமீபியாவில் இருந்து இந்தியா கொண்டு வரப்படும் சீட்டாக்கள்...
x

புதுடெல்லி,

இந்தியாவில் 1952- ஆம் ஆண்டு முற்றிலும் அழிந்துவிட்ட இனமாக அறிவிக்கப்பட்ட சிவிங்கிப் புலிகள் (சீட்டாக்கள்) இந்திய வனங்களில் மீண்டும் கொண்டு வருவதற்கு இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இதன் பலனாக 70 ஆண்டுகளுக்குப் பிறகு சிவிங்கிப்புலி மறுஅறிமுகத்திட்டம் மூலமாக 8 சிவிங்கிப் புலிகள் இந்தியாவிற்கு நாளை கொண்டு வரப்படுகின்றன. இதற்காக நமீபியாவிடம் இந்தியா ஒப்பந்தம் மேற்ஒண்டுள்ளது. 3 ஆண் சிவிங்கிப் புலிகள், 5 பெண் சிவிங்கி புலிகள் என மொத்தம் 8 சிவிங்கி புலிகள் கொண்டு வரப்படுகின்றன. மத்தியப்பிரதேசம் கொண்டுவரப்பட்டும் இந்த சிவிங்கி புலிகள் குனோ தேசிய பூங்காவில் விடப்படுகிறது.

நமிபியாவிலிருந்து வரும் சிவிங்கிப் புலிகளின் வீடியோ படம் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் சிவிங்கிப் புலிகள் தங்களின் சொந்த வாழ்விடத்தின் இயற்கையான சூழலில் உலவிக்கொண்டு இருக்கின்றன.இந்தியா வரும் இந்தச் சிவிங்கிப் புலிகள் பிரதமர் மோடியால், அவரது பிறந்த நாளான செப்.17ம் தேதி இந்திய காடுகளுக்குள் திறந்து விடப்படுகின்றன.

சிவிங்கி புலிகளை கொண்டு வருவதற்காக B747 ரக ஜம்போ ஜெட் விமானம் நமீபியா தலைநகரை சென்றடைந்துள்ளது. அங்கிருந்து வெள்ளிக்கிழமை சிவிங்கிப்புலிகளுடன் கிளம்பும் விமானம், நாளை காலை ஜெய்ப்பூர் விமான நிலையம் வந்து சேருகின்றது. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவிற்கு கொண்டு வரப்பட உள்ளது.


Next Story