கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்


கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
x

கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி அருகே இளங்குடி கிராமத்தில் உள்ள பகத்சாலமூர்த்தி அய்யனார் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் இளங்குடி-திருப்பத்தூர் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 56 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 15 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை நகரம்பட்டி வைத்தியா மற்றும் காரைக்குடி கருப்பணன் வண்டியும், 2-வது பரிசை கள்ளந்திரி ஐந்துகோவில் சுவாமி வண்டியும், 3-வது பரிசை ஏரியூர் ஆசிரியர் விஜயவேல் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 41 வண்டிகள் கலந்துகொண்டு இரு பிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை புலிமலைப்பட்டி முனிச்சாமி மற்றும் வெளிமுத்தி வாகினி பைனான்ஸ் வண்டியும், 2-வது பரிசை மருங்கூர் முகமது வண்டியும், 3-வது பரிசை உத்தமபாளையம் மணிமுருகன் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை தேவகோட்டை லெட்சுமணன் செட்டியார் வண்டியும், 2-வது பரிசை சிவகங்கை அருண் ஸ்டுடியோ வண்டியும், 3-வது பரிசை ஈளக்குடி யாழினி வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story