பறிமுதல் செய்யப்பட்ட பென்டிரைவ், செல்போன் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு: சேலத்தில் கைதான வாலிபருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு விசாரணையில் பரபரப்பு தகவல்


பறிமுதல் செய்யப்பட்ட பென்டிரைவ், செல்போன் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு:  சேலத்தில் கைதான வாலிபருக்கு  ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு  விசாரணையில் பரபரப்பு தகவல்
x

சேலத்தில் கைதான வாலிபருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருந்தது விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது. அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட பென்டிரைவ், செல்போன் ஆகியவை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சேலம்

சேலம்,

வாலிபர் கைது

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏ.பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் ஆசிக் (வயது 24). இவர் சேலம் கோட்டை பகுதியில் வெள்ளி தொழில் செய்து வந்தார். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி ஆசிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) மற்றும் கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர்.

அவரை அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். ஆசிக்கை அதிகாரிகள் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ்தொடர்ந்து அவர் மீது தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு வைத்தல், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

பென்டிரைவ், செல்போன் பறிமுதல்

இதற்கிடையே ஆசிக் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் பென்டிரைவ், செல்போன், கத்தி, பாகிஸ்தான் கொடி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தபோலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசை நியமித்து போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ் (டவுன்), மதனமோகன் (அரசு ஆஸ்பத்திரி) ஆகியோர் கொண்ட தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஆசிக்கிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

கைது செய்யப்பட்ட ஆசிக் சமூக வலைத்தளங்கள் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்துள்ளார். அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் அவரிடம் தொடர்பு கொண்டு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை தருவதாகவும், நாங்கள் சொல்லும் போது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும், பாதுகாப்பில் குளறுபடி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆய்வகத்துக்கு அனுப்பி வைப்பு

அதுவரை நமது இயக்கத்துக்கு ஆட்கள் சேர்க்க வேண்டும் என்று அவரிடம் அந்த அமைப்பினர் கூறி உள்ளனர். ஆசிக்கிடம் பறிமுதல் செய்யப்பட்ட பென்டிரைவ், செல்போன் ஆகியவை சென்னையில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பிறகுதான் ஆசிக்கை காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளோம். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார், யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story