ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு முகாம்
பாவூர்சத்திரம் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் எம்.எஸ்.பி.வேலாயுத நாடார் லெட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான நேர்காணல் தேர்வு ஆன்லைனில் நடைபெற்றது.
ஜே.எஸ்.இ. என்ஜினீயரிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜான் சுரேஷ், மனிதவள மேலாளர்கள் ஐஸ்வர்யா, ஆனந்தன், கருப்பசாமி மற்றும் ஷியாமளா ஆகியோர் மாணவர்களை தேர்வு செய்தனர். ஆன்லைன் நேர்காணலில் 68 மாணவர்கள் கலந்து கொண்டதில், 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு பெற்ற மாணவர்களை கல்லூரியின் தாளாளர் எம்.எஸ்.பி.வி.காளியப்பன், ஆலோசகர் பாலசுப்பிரமணியன், முதல்வர் ரமேஷ், அனைத்து துறைத்தலைவர்கள், வேலை வாய்ப்பு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் மணிராஜ் மற்றும் அனைத்து துறைத் தலைவர்கள் செய்திருந்தனர்.