உணவு சாப்பிட்ட 10 மாணவர்கள் வாந்தி, மயக்கம்


உணவு சாப்பிட்ட 10 மாணவர்கள் வாந்தி, மயக்கம்
x

செய்யாறில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை

செய்யாறில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்

செய்யாறு-காஞ்சீபுரம் சாலையில் வளர்புரம் பகுதியில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு படிக்கும் 14 மாணவர்கள் விடுதியில் தங்கி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் விடுதியில் காலை உணவு சாப்பிட்டுள்ளனர். அதில், 10 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து மாணவர்கள் செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி அறிந்ததும் செய்யாறு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் சதீஷ்குமார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் கல்லூரிக்கு சென்று விடுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

சுகாதார சீர்கேடு

இதுகுறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் சதீஷ்குமார் கூறுகையில், நேற்று முன்தினம் இரவு சாப்பிட்ட உணவினால் தான் ஒவ்வாமை ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அனைவரும் நன்றாக உள்ளனர். விடுதி ஆய்வில் உணவு கூடத்தில் சற்று சுகாதார சீர்கேடு காணப்பட்டது, பழைய பாத்திரங்களிலேயே சமைத்து வருவது தெரியவந்துள்ளது. பாத்திரங்களை மாற்றவும் சுகாதாரத்தை முறையாக கடைபிடிக்கவும் அறிவுறுத்தி எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் உணவகத்தில் இருந்த உணவு மற்றும் கல்லூரில் உள்ள தண்ணீர் ஆகியவற்றை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது' என்றார்.

மாணவர்கள் கூறுகையில், விடுதியில் உணவு சரியில்லை. இதுகுறித்து நிர்வாகத்திடம் தெரிவித்தால் அடுத்த சில நாட்களுக்கு நன்றாக சமைத்து கொடுகின்றனர். அதன்பிறகு தரமாக சமைப்பதில்லை' என்றனர்.


Next Story