106-வது பிறந்தநாள்: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் 17-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம் மரியாதை


106-வது பிறந்தநாள்: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் 17-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம் மரியாதை
x

அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் வருகிற 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது.

சென்னை,

அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் வருகிற 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் காலை 10 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.

எம்.ஜி.ஆர். வாழ்ந்த சென்னை ராமாபுரம் தோட்ட இல்லத்தில் நடைபெறும் சமபந்தி விருந்திலும் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது அவர், எம்.ஜி.ஆரின் வரலாற்றை புத்தகமாக எழுதிய ஆசிரியர்களை கவுரவிக்கிறார்.இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.


Next Story