உண்டியல் காணிக்கை மூலம் ரூ.12 லட்சத்து 43 ஆயிரம் வருவாய்


உண்டியல் காணிக்கை மூலம் ரூ.12 லட்சத்து 43 ஆயிரம் வருவாய்
x

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.12 லட்சத்து 43 ஆயிரம் வருவாய் கிடைத்தது.

தேனி

தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் நடந்து முடிந்தது. கோவிலில் 3 மாதத்துக்கு ஒரு முறை நிரந்தர உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த மாதம் திருவிழா முடிந்தததையொட்டி 21 தற்காலிக உண்டியல்களில் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதற்கு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கலைவாணன் தலைமை தாங்கினார். ஆய்வாளர் தியாகராஜன், கோவில் செயல் அலுவலர் நாகராஜ், மேலாளர் பாலு மற்றும் கணக்கர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இந்த பணியில் வீரபாண்டி சவுராஷ்டிரா கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். உண்டியல் காணிக்கை மூலம் ரூ.12 லட்சத்து 43ஆயிரத்து 251 வருவாய் கிடைத்தது.


Next Story