பாதுகாப்பு பணியில் 140 கடலோர பாதுகாப்பு படை போலீசார்


பாதுகாப்பு பணியில் 140 கடலோர பாதுகாப்பு படை போலீசார்
x

பாதுகாப்பு பணியில் 140 கடலோர பாதுகாப்பு படை போலீசார்

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவையொட்டி 140 கடலோர பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடற்கரையில் அசம்பாவிதங்களை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாங்கண்ணி பேராலயம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆண்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது.

விழாவையொட்டி வெளிநாடு, வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து செல்கின்றனர்.

140 கடலோர பாதுகாப்பு படை போலீசார்

விழாவையொட்டி இந்த 10 நாட்களுக்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ராமேஸ்வரம் கடலோர காவல் படை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் தலைமையில் ஒரு கூடுதல் கண்காணிப்பாளர், 2 துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் 6 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 140 கடலோர பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ரோந்து பணி

மேலும் கடற்கரையில் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் மோட்டார் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு உயிர் காக்கும் உபகரணங்களான மிதவை, நைலான் கயிறுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 3 ரோந்து படகுகள், மணலில் செல்லக்கூடிய மோட்டார் வாகனம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. கடலில் இரவில் ஒளிரும் மின்விளக்குகளோடு எச்சரிக்கும் தடுப்பு கயிறுகளும் போடப்பட்டு கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story