91 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


91 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x

91 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அரியலூர்

செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள அயன்தத்தனூர், மாரியம்மன் கோவில் வளாகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். இம்முகாமிற்காக ஏற்கனவே பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 102 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 91 மனுக்கள் ஏற்கப்பட்டும், 11 மனுக்கள் விசாரணையிலும் உள்ளது. முகாமில் 192 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இம்முகாமில், சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் 23 பேருக்கு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் முதியோர் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய தொகையும், 9 பேருக்கு ரூ.2 லட்சத்து 2,500 மதிப்பில் இயற்கை மரணம் உதவித்தொகையும், வருவாய்த்துறை சார்பில் 28 பேருக்கு நத்தம் மனைவரிப் பட்டாக்களும், உட்பிரிவு செய்து பட்டாக்களும் உள்பட மொத்தம் 91 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 96 ஆயிரத்து 28 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இதையடுத்து, மக்கள் தொடர்பு முகாமில் அளிக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் மணப்பத்தூர் ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்து ஆய்வு செய்து, தரம் குறைந்த அரிசி மூட்டைகளை மீள அனுப்பி வைத்திடவும், பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்கிட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், பெரியாக்குறிச்சி கிராமத்தில் நடைபெற்று வரும் வாய்க்கால் தூர்வாரும் பணியினை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, மணக்குடையான் ஊராட்சி, குழந்தைகள் மையத்தினையும், தாமரைப்பூண்டி அங்கன்வாடி மையத்தினையும் நேரில் பார்வையிட்டு பதிவேடுகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும் கேட்டறிந்தார்.


Next Story