டிபன் கடைக்காரரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது
டிபன் கடைக்காரரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி
திருச்சி உறையூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மூக்கையா(வயது 37). இவர் திருச்சி அரசு மருத்துவமனை அருகே டிபன் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை புத்தூர் ஆபீசர்காலனி அருகே நின்றபோது அங்கு வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி மூக்கையாவிடம் இருந்து ரூ.1000-த்தை பறித்தனர். இது குறித்த புகாரின்பேரில் அரசு மருத்துவமனை போலீசார் 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள், புத்தூர் ஆபீசர் காலனியை சேர்ந்த பிரபாகரன் (49), தென்னூரை சேர்ந்த முகமதுஇலியாஸ் (36) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தார்.
Related Tags :
Next Story