தொழிலாளி வீட்டில் நகை திருடிய 2 பேர் கைது


தொழிலாளி வீட்டில் நகை திருடிய 2 பேர் கைது
x

கன்னிவாடி அருகே, பட்டப்பகலில் தொழிலாளி வீட்டில் நகை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

கன்னிவாடி அருகே உள்ள தர்மத்துப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் சக்திவேல். கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி விஜயா (வயது 33). இவர், திண்டுக்கல்லில் உள்ள கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கடந்த 25-ந்தேதி இவர்கள் 2 பேரும் வேலைக்கு சென்று விட்டனர். இதனைநோட்டமிட்ட மர்ம நபர்கள், பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் பீரோவை உடைத்து, அதில் இருந்த 6 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய தம்பதி பூட்டு உடைக்கப்பட்டு நகை திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கன்னிவாடி போலீஸ் நிலையத்தில் விஜயா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் டி.பண்ணப்பட்டியை சேர்ந்த பவித்திரன் (24), பூபதி (21) ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையிலான தனிப்படையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 6 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story