டெல்டா மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் ஆய்வு


டெல்டா மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் ஆய்வு
x

டெல்டா மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளார்.

சென்னை,

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 24-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளார்.

இந்த ஆய்வின் போது டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் வடிகால் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

இதற்காக நாளை காலை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டைக்கு செல்ல உள்ளார். அன்று புதுக்கோட்டையில் 3 இடங்களில் முதல்-அமைச்சர் ஆய்வு செய்ய உள்ளார்.

நாளை மறுநாள் நாகை, மயிலாடுதுறை தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். சுமார் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு செய்து விவசாயிகளின் கருத்துக்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்க உள்ளார்.


Next Story