புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்காரர்கள் 2 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்காரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர்
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்த வாலிகண்டபுரம் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் மங்களமேடு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் சக்கரபாணி (53), சங்கர் (51) ஆகியோர் தங்கள் மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மூட்டையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சக்கரபாணியிடம் இருந்து சுமார் ரூ.12,990 மதிப்புள்ள புகையிலை பொருட்களையும், சங்கரிடம் இருந்து சுமார் ரூ.6,600 மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story