குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது


குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
x

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் பால்வாரி கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர் (வயது 29). இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட போது கலசபாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அதேபோல் திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலை ஜன்னத் நகரை சேர்ந்தவர் காசிம் (26). இவர், கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்க குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் சவுந்தர் மற்றும் காசிம் ஆகிய 2 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story