பழனி பாதயாத்திரை பக்தர் உள்பட 2 பேர் பலி; பெண் படுகாயம்
வெவ்வேறு விபத்துகளில்பழனி பாதயாத்திரை பக்தர் உள்பட 2 பேர் பலியானார்கள். பெண் பக்தர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
வெவ்வேறு விபத்துகளில்பழனி பாதயாத்திரை பக்தர் உள்பட 2 பேர் பலியானார்கள். பெண் பக்தர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
பாதயாத்திரை
திருச்சியை அடுத்த இனாம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் (வயது 19). இவர் பழனிக்கு மாலை அணிந்து இருந்தார். இந்த நிலையில் கிஷோர் அதே ஊரைச் சேர்ந்த சிலருடன் பாதயாத்திரையாக பழனிக்கு சென்றார்.
திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வையம்பட்டியை அடுத்த சேசலூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் மோதியதில் கிஷோர் படுகாயம் அடைந்தார்.
சாவு
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவர் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படுகாயம்
இதேபோல் கரூர் மாவட்டம் மேலவெளியூரை சேர்ந்தவர் நித்யா (26). பழனிக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டு இருந்தார். திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வடக்கு அம்மாபட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மணப்பாறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் பலி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஓவியமங்கலம் வெள்ளாளபட்டியை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மகன் பெனிட்டோ ஸ்தனிஸ்லாஸ் (வயது 38). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு துவாக்குடியில் உள்ள திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, வேளாங்கண்ணியில் இருந்து திருப்பூரை நோக்கி சென்ற அரசு அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பெனிட்டோ ஸ்தனிஸ்லாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் தாராபுரத்தைச் சேர்ந்த தமிழ்வாணன் (53) என்பவரை கைது செய்தனர்.