தோட்டத்தில் சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது
தென்காசி அருகே தோட்டத்தில் சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரி பகுதியில் சிலர் சாராயம் காய்ச்சுவதாக குற்றாலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கோமதி நாதன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது ஒரு தோட்டத்தில் உள்ள ஷெட்டில் 3 பேர் சாராயம் காய்ச்சி கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்த போது இரண்டு பேர் பிடிபட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆயிரப்பேரியை அடுத்த பாட்டப்பத்தை சேர்ந்த முருகையா மகன் கனகராஜ் (வயது 31), மாடசாமி மகன் ராமகிருஷ்ணன் (46) என்பது தெரிய வந்தது. கண்ணன் என்பவர் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து கனகராஜ், ராமகிருஷ்ணன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய அடுப்பு, டிரம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சாராயம் காய்ச்சிய தோட்டம் கண்ணனுக்கு சொந்தமானது.