மது விற்ற 2 பேர் கைது
நெல்லையில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
நெல்லை மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் நேற்று முன்தினம் மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மது விற்பனையில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டம் விட்டிலாபுரத்தை சேர்ந்த நாராயணன் (வயது 53) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 23 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதவிர பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துலட்சுமி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற மானூரை சேர்ந்த வேல்முருகன் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story