பிரம்மதேசம் பகுதியில்சாராயம் விற்ற 2 பேர் கைது
பிரம்மதேசம் பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம்
பிரம்மதேசம்,
பிரம்மதேசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் பிரம்மதேசம் பகுதிக்குட்பட்ட குன்னப்பாக்கம் கிராமத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த, அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம்(வயது 39) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் மொளசூர் கிராமத்தில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த, அதேஊரை சேர்ந்த தேவேந்திரன்(37) என்பவரையும் பிரம்மதேசம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story