புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
x

களக்காடு அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் மஞ்சுவிளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது 3 பேர் சாக்கு பையுடன் நின்று கொண்டு, அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடினர். இருப்பினும் போலீசார் விரட்டி சென்று 2 பேரை பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் மஞ்சுவிளை தெற்கு தெருவை சேர்ந்த ஜெயராஜ் மகன் வினித்பாபு (25), திருக்குறுங்குடி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த நைனா முகம்மது (63) என்பதும், தப்பி ஓடியது மஞ்சுவிளையை சேர்ந்த மரியதாஸ் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடத்திய சோதனையில், புகையிலை பாக்கெட்டுகளை மறைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து வினித்பாபு, நைனா முகம்மது ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 60 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மரியதாசை தேடி வருகின்றனர்.


Next Story