புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே உள்ள திருமலையப்பபுரம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கி (வயது 55). இவர் பொட்டல்புதூரில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக கடையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இசக்கியின் கடையிலும், திருமலையப்பபுரத்தில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த சுமார் 40 கிலோ புகையிலை பொருட்களும், அதன் மூலம் விற்ற பணம் சுமார் ரூ.38 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இசக்கியை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இசக்கிக்கு புகையிலை பொருட்கள் சப்ளை செய்த கடையம் அருகே உள்ள மந்தியூர் நெடுந்தெருவை சேர்ந்த முகம்மது இஸ்மாயில் மகன் காஜா (37) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story