மது விற்ற 2 பேர் சிக்கினர்


மது விற்ற 2 பேர் சிக்கினர்
x

நெல்லையில் மது விற்ற 2 பேர் சிக்கினர்.

திருநெல்வேலி

சிவந்திபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணாபுரம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்ற நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஸ்ரீவைகுண்டம் நாகம்மாள் காலனியை சேர்ந்த வடிவேல் மகன் சுப்பிரமணியன் (வயது 39) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் தேவர்குளம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துபாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது, தேவர்குளம் பகுதியில் மது விற்றதாக அதே பகுதியை சேர்ந்த ஆபிரகாம் (35) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Related Tags :
Next Story