தேனாடுகம்பையில் மது விற்ற 2 பேர் சிக்கினர்


தேனாடுகம்பையில் மது விற்ற 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 1 Feb 2023 12:15 AM IST (Updated: 1 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனாடுகம்பையில் மது விற்ற 2 பேர் சிக்கினர்

நீலகிரி

ஊட்டி

ஊட்டி தேனாடுகம்பை போலீஸ் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அம்பேத்கர் நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தபோது, அவர் மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பதும், மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர் இதே போல் ஊட்டி ஊரக போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தங்காடு பகுதியில் மது விற்பனை செய்த துரைசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story