ஜல்லி, மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்


ஜல்லி, மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்
x

நெல்லை அருகே ஜல்லி, மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை அருகே கங்கைகொண்டான் பகுதியில் மானூர் துணை தாசில்தார் குமார் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது தாழையூத்து ராம் நகரை சேர்ந்த சீனி ஜேம்ஸ் (வயது 48), கீழ செழியநல்லூரை சேர்ந்த ஸ்ரீகுமார் (37) ஆகியோர் ஓட்டி வந்த லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் மண் மற்றும் ஜல்லி கற்கள் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்து கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தார். மேலும் ஜல்லி கற்கள், எம்.சாண்ட் மணல் ஆகியவற்றை லாரிகளுடன் பறிமுதல் செய்தார்.


Related Tags :
Next Story