பழனி அருகே கஞ்சா விற்றவருக்கு 2 ஆண்டு சிறை


பழனி அருகே கஞ்சா விற்றவருக்கு 2 ஆண்டு சிறை
x

பழனி அருகே கஞ்சா விற்றவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

பழனி அருகே உள்ள பாப்பம்பட்டியை சேர்ந்தவர் மூக்கையா (வயது 65). இவர் கடந்த 2005-ம் ஆண்டு கஞ்சா விற்பனை செய்த வழக்கில் பழனி தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட மூக்கையாவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story