கத்தியை காட்டி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது


கத்தியை காட்டி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது
x

கத்தியை காட்டி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42). சம்பவத்தன்று இவரிடம் திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த அர்ஜுன் (21), விஜயகுமார் (24) ஆகிய 2 பேர் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மணிகண்டன் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அர்ஜுன், விஜயகுமார் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் 2 பேர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story