அ.தி.மு.க மூன்று அணியாக பிளவுபட்டதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த அஞ்சுகிறார்கள்- ஸ்டாலின் தாக்கு


அ.தி.மு.க மூன்று அணியாக பிளவுபட்டதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த அஞ்சுகிறார்கள்- ஸ்டாலின் தாக்கு
x
தினத்தந்தி 24 Jun 2017 10:58 AM GMT (Updated: 24 Jun 2017 10:57 AM GMT)

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதாலும், அ.தி.மு.க மூன்று அணியாக பிளவுபட்டதாலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த அஞ்சுகிறார்கள் என மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கச் செய்யும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக் காலம் வரும் ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் டிசம்பர் 31-ம் தேதி வரை பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக அதிகாரிகளின் பதவிக் காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மசோதா நிறைவேற்றத்துக்கு கடும் கண்டனம் தெரவித்துள்ளார்.இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், 'உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதாலும், அ.தி.மு.க மூன்று அணியாக பிளவுபட்டதாலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த அஞ்சுகிறார்கள் என்று கூறினார்.

Next Story