நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்: திருமாவளவன்


நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்: திருமாவளவன்
x
தினத்தந்தி 19 July 2017 4:32 PM GMT (Updated: 2017-07-19T22:02:15+05:30)

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “ ஊழலுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ள கமலின் செயல் அரசியலுக்கு வருவதற்கான முயற்சி. ஒரு சில இடங்களில் பாஜகவை விமர்சிப்பதால்  கமலை அக்கட்சியினர் எதிர்க்கின்றனர். ஜெயலலிதாவின் வெற்றிடத்தை பயன்படுத்தி நடிகர்கள் அரசியலுக்கு வர முயற்சிக்கின்றனர்” இவ்வாறு தெரிவித்துள்ளார். 


Next Story