காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற ராகுல்காந்திக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற ராகுல்காந்திக்கு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து ராகுல் காந்திக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமலஹாசன் டுவிட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கமலஹாசன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ராகுல் ஜிக்கு வாழ்த்துக்கள். உங்களை பற்றி உங்கள் பதவி தீர்மானிக்காது. ஆனால் நீங்கள் உங்கள் பதவியை வரையறுக்கலாம். உங்கள் குடும்ப முன்னோர்களை கண்டு நான் பெருமை அடைந்திருக்கிறேன். நீங்களும் கடுமையாக உழைத்து எனது பெருமைக்கு உரியவர் ஆவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. உங்கள் தோள்களுக்கு பலம் சேர்ந்திருக்கிறது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
Congratulations Mr. Rahul.G. Your seat does not define you but you can define your position. I have admired your elders. I am sure you would work and deserve my admiration too. All the strength to your shoulders.
— Kamal Haasan (@ikamalhaasan) December 16, 2017
Related Tags :
Next Story