ஆளும் அதிமுக ஜெயித்தால் தான் ஆர்.கே.நகர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் -முதல்-அமைச்சர் பழனிசாமி


ஆளும் அதிமுக ஜெயித்தால் தான் ஆர்.கே.நகர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் -முதல்-அமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 16 Dec 2017 5:32 PM IST (Updated: 16 Dec 2017 5:49 PM IST)
t-max-icont-min-icon

ஆளும் அதிமுக ஜெயித்தால் தான் ஆர்.கே.நகர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என முதல்-அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

ஆர்.கே.நகரில் புதுவண்ணாரப்பேட்டையில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் வாக்கு சேகரித்தனர்.

தேர்தல் பிரச்சாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

திமுக அதிகாரத்தில் இருந்தபோது ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை. மக்களின் சந்திப்பைக் கூட ஸ்டாலின் கொச்சைப்படுத்துகிறார்.

ஆர்.கே.நகரில் ஜெ.பிறந்தநாள் அன்று பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்கப்படும். ஆர்.கே.நகர் தொகுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றியவர் ஜெயலலிதா. ஆர்.கே.நகர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றி காட்டுவோம். ஆர்.கே.நகர் மக்கள் டிடிவி தினகரனை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம் தீட்டுகிறார். ஆளும் அதிமுக ஜெயித்தால் தான் ஆர்.கே.நகர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு பெருகிவிட்டதால், ஆர்.கே.நகரில் 3 நாள் பிரசாரம் செய்ய ஸ்டாலின் வருகிறார். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story