மாநில செய்திகள்

சென்னையில் போகி பண்டிகையால் புகை மூட்டம்: விமான போக்குவரத்து பாதிப்பு + "||" + Bogi festival in Chennai: Air traffic impacted of smoke

சென்னையில் போகி பண்டிகையால் புகை மூட்டம்: விமான போக்குவரத்து பாதிப்பு

சென்னையில் போகி பண்டிகையால் புகை மூட்டம்:  விமான போக்குவரத்து பாதிப்பு
சென்னையில் போகி பண்டிகையால் ஏற்பட்ட புகை மூட்டத்தினை அடுத்து விமான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.#Chennai #Airtraffic

சென்னை,

சென்னையில் போகி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்களது வீடுகளில் உள்ள பழைய பொருட்களை தீயிலிட்டு கொளுத்தி வருகின்றனர்.  இதனால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.  சென்னையில் பனி மூட்டத்துடன் புகை மூட்டமும் சூழ்ந்த நிலையில் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

போகி பண்டிகையை அடுத்து ஏற்பட்ட புகை மூட்டத்தினால் சென்னை விமான போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது.  சென்னையில் அதிகாலை 4 மணி முதல் விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

சென்னைக்கு வரவேண்டிய 18 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

#Chennai | #Airtraffic