மாநில செய்திகள்

தஞ்சை அருகே பட்டுக்கோட்டையில் சாலை விபத்தில் 5 பேர் பலி + "||" + 5 killed in road accident in Pattukottai near Tanjore

தஞ்சை அருகே பட்டுக்கோட்டையில் சாலை விபத்தில் 5 பேர் பலி

தஞ்சை அருகே பட்டுக்கோட்டையில் சாலை விபத்தில் 5 பேர் பலி
தஞ்சை அருகே பட்டுக்கோட்டையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர். #RoadAccident

தஞ்சாவூர்,

தஞ்சை அருகே பட்டுக்கோட்டையில் புறவழி சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது.  இதில் விஜயகுமார், அரவிந்த் மற்றும் கார் ஓட்டுநர் தட்சிணா மூர்த்தி உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.

திருச்செந்தூர் கோவிலுக்கு தனது குடும்பத்தினருடன் விஜயகுமார் சென்று விட்டு திரும்பியபொழுது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.

இந்த சாலை விபத்தில் காயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.