நினைவேந்தல் நிகழ்ச்சியை தடுக்க சென்னை மெரினா, சேப்பாக்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


நினைவேந்தல் நிகழ்ச்சியை தடுக்க சென்னை மெரினா, சேப்பாக்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 20 May 2018 11:00 AM GMT (Updated: 20 May 2018 11:00 AM GMT)

மெரினாவில் நடைபெறவிருந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை தடுக்க மெரினா மற்றும் சேப்பாக்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #MarinaPolice

சென்னை,

இலங்கையில் போரின் போது உயிரிழந்த தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவதாக தகவல் ஒன்று வெளிவந்தது. 13 இயக்கங்கள் ஆதரவு தெரிவித்து நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவித்திருந்த நிலையில் மெரினா மற்றும் சேப்பாக்கம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போராட்டமோ, பொதுக்கூட்டமோ நடத்துவதற்கு ஐகோர்ட்டு தடை விதித்திருந்த நிலையில் உத்தரவை மீறி 
மெரினாவில் நிகழ்வுகள் ஏதும் நடைபெறாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு அதிகரித்துள்ளது. தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி என்ற பெயரில் 
மெரினாவில் ஒன்று கூடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. 

மேலும் மெரினா பகுதியில் பல்வேறு அமைப்பினர் நுழையாமல் இருக்க போலீஸ் ரோந்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மெரினா மற்றும் சேப்பாக்கம் பகுதிகளில் பாதுகாப்பு பணிகளுக்காக சுமார் 1000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 


Next Story