தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 13 July 2018 2:10 PM GMT (Updated: 13 July 2018 2:10 PM GMT)

தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



சென்னை, 

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இன்று மாலையும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இதற்கிடையே நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோவை, நெல்லை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் கனமழை மற்றும் மிகக்கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
  

Next Story