மாநில செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - மு.க.ஸ்டாலின் + "||" + DMK leader Karunanidhi's health has improved - MK Stalin

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். #KarunanidhiHealth #Karunanidhi #DMK #Gopalapuram #MKStalin
சென்னை

தி.மு.க செயல் தலைவர்  மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

கருணாநிதிக்கு ஏற்பட்டிருந்த  காய்ச்சல் , நோய்த்தொற்று நன்றாக குறைந்து கொண்டிருக்கிறது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  என கூறினார்

 திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோருக்கு ஸ்டாலின்  நன்றி தெரிவித்தார்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் திமுக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு மருத்துவ உதவி வழங்க முன்வந்த பிரதமர் மோடிக்கு நன்றி. கருணாநிதிக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் குணமடைந்து, தனது குரலில் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.