மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகை திரிஷா அஞ்சலி


மெரினாவில் திமுக தலைவர்  கருணாநிதி நினைவிடத்தில் நடிகை திரிஷா அஞ்சலி
x
தினத்தந்தி 9 Aug 2018 9:07 AM GMT (Updated: 9 Aug 2018 9:07 AM GMT)

மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகை திரிஷா அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi

சென்னை,

திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் (7-ம் தேதி) மாலை 6.10 மணியளவில் காலமானார். தொடர்ந்து நேற்று மாலை அவரின் உடல்  முழு அரசு மரியாதையுடன், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. 

மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில், திமுக தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று காலை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,  ஆ.ராசா, கே.என்.நேரு, மா.சுப்பிரமணியம், எ.வ.வேலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகை திரிஷா அஞ்சலி செலுத்தினார். 

Next Story