மாநில செய்திகள்

சென்னையில் பெட்ரோல் விலை 5 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.80.19 ஆக விற்பனை + "||" + Petrol price in Chennai has increased by 5 paise to Rs 80.19 per liter

சென்னையில் பெட்ரோல் விலை 5 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.80.19 ஆக விற்பனை

சென்னையில் பெட்ரோல் விலை 5 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.80.19 ஆக விற்பனை
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 5 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 80.19 ஆகவும், டீசல் விலை 6 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 72.65 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. #PetrolPrice
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.  கடந்த மே மாதத்தில் இவற்றின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டு வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது.  பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை 5 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.80.19 ஆகவும், டீசல் விலை 6 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.72.65 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. நாளுக்கு நாள் விலை ஏறி வரும் பெட்ரோல் விலை தற்போது மறுபடியும் லிட்டர் ஒன்றிற்கு ரூ.80 க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதால் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: வாகன ஓட்டிகள் அவதி
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 36 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.84.85 ஆகவும், டீசல் விலை 25 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.77.74 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. #DieselPrice
2. இன்றும் புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை, வாகன ஓட்டிகள் அவதி
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 25 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.83.91 ஆக விற்பனை செய்யப்படுகிறது. #PetrolPrice
3. சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ.80.59 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.99 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. #PetrolPrice

ஆசிரியரின் தேர்வுகள்...