கேரளாவில் தவித்த ரெயில் பயணிகள் 36 சிறப்பு ரெயில்கள் மூலம் மீட்பு தெற்கு ரெயில்வே தகவல்


கேரளாவில் தவித்த ரெயில் பயணிகள் 36 சிறப்பு ரெயில்கள் மூலம் மீட்பு தெற்கு ரெயில்வே தகவல்
x
தினத்தந்தி 18 Aug 2018 10:19 PM GMT (Updated: 18 Aug 2018 10:19 PM GMT)

கேரளா ரெயில் நிலையங்களில் மழை வெள்ளத்தில் மாட்டிக்கொண்டு தவித்த ரெயில் பயணிகளை 36 சிறப்பு ரெயில்கள் மூலம் தெற்கு ரெயில்வே மீட்டுள்ளது.

சென்னை,

கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ரெயில் பயணிகளுக்கு பல்வேறு உதவிகள் மேற்கொள்ள தெற்கு ரெயில்வே பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

இதில் திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் மழை வெள்ளத்தில் மாட்டிக்கொண்டு தவித்த ரெயில் பயணிகளை 36 சிறப்பு ரெயில்கள் மூலம் தெற்கு ரெயில்வே மீட்டுள்ளது. அவசர கால மருத்துவ முகாம்கள் சோரணூர், திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் மற்றும் நாகர்கோவில் ஆகிய ரெயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ரெயில் நிலையங்களில் சிறப்பு அவசர உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முக்கிய ரெயில் நிலையங்களில் உள்ள உணவகங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் திறந்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள மாநில போக்குவரத்து கழகத்துடன் இணைந்து பாலக்காடு உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் தவிக்கும் பயணிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல் அனைத்தும் தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story