மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமி மீதான புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது ஐகோர்ட்டில் தி.மு.க. மனு + "||" + DMK in the High Court Petition

எடப்பாடி பழனிசாமி மீதான புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது ஐகோர்ட்டில் தி.மு.க. மனு

எடப்பாடி பழனிசாமி மீதான புகாரை
லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது
ஐகோர்ட்டில் தி.மு.க. மனு
எடப்பாடி பழனிசாமி மீதான புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்று ஐகோர்ட்டில் தி.மு.க. மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை,

தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நிலுவையில் உள்ள இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் மனுதாரர் ஆர்.எஸ்.பாரதி, ஐகோர்ட்டில் புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

எனது புகார் மீது கடந்த 22.6.2018 அன்றே முதற்கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடங்கிவிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, வரைவு அறிக்கை கடந்த 28.8.2018 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் தான் ஊழல் கண்காணிப்புத்துறை செயல்படுகிறது.

எனவே, முதல்-அமைச்சருக்கு எதிரான புகார் தொடர்பாக அவரது கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையே விசாரித்தால் நியாயம் கிடைக்காது.

எனவே, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகாரை எந்தவித குறுக்கீடும் இல்லாமல் செயல்படும் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். அத்துடன் இந்த விசாரணையை ஐகோர்ட்டு நேரடியாக கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் ‘கஜா’ புயல் பாதிப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி பேச்சு
‘கஜா’ புயல் பாதிப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைப்பேசியில் பேசியுள்ளார். மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என உறுதியளித்துள்ளார்.
2. ‘அம்மா’ என்ற பெயர் மீது எடப்பாடி பழனிசாமிக்கு தனிப்பட்ட உரிமை எதுவும் இல்லை ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் பதில் மனு
‘அம்மா’ என்ற பெயர் மீது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட உரிமையை பெற்றிருக்கவில்லை என்று ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
3. எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் புகாரை சி.பி.ஐ. விசாரிக்க எதிர்ப்பு: மேல்முறையீட்டு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் புகாரை சி.பி.ஐ. விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) விசாரணை நடைபெறுகிறது.
4. பெற்றோரின் மறைவினால் கல்வியை நிறுத்திய இளம் பெண், சகோதரரின் கல்விச் செலவை அரசே ஏற்கும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
பெற்றோரின் மறைவினால் வறுமை ஏற்பட்டதைத் தொடர்ந்து கல்வியை நிறுத்திய இளம் பெண் மற்றும் அவரது சகோதரரின் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
5. சாலைகள் அமைப்பதில் முறைகேடு நடந்ததாக வழக்கு: சி.பி.ஐ. விசாரணையை எதிர்கொள்ள பயமா? எடப்பாடி பழனிசாமி பேட்டி
சி.பி.ஐ. விசாரணையை எதிர்கொள்ள பயமா? என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.