நூற்றாண்டு நிறைவு விழாவில் அறிவித்தபடி கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர்


நூற்றாண்டு நிறைவு விழாவில் அறிவித்தபடி கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர்
x
தினத்தந்தி 10 Oct 2018 10:45 PM GMT (Updated: 10 Oct 2018 9:29 PM GMT)

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட்டது. இதுதொடர்பாக புதிய பெயர் பலகை வைக்கப்பட்டது.

பூந்தமல்லி,

சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரியது. ரூ.103 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பஸ் நிலையத்தை மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2002-ம் ஆண்டு திறந்துவைத்தார்.

தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்லும் இந்த பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட்டது

இந்த நிலையில் சென்னையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு மறைந்த முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி நேற்று கோயம்பேடு பஸ்நிலையத்துக்கு ‘புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான பெயர் பலகை பஸ் நிலையத்தின் முன்பு பொருத்தப்பட்டுள்ளது. கட்டிடத்தின் மீதும், பிளாட்பார நுழைவுவாயிலிலும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

Next Story