சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்தது


சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்தது
x
தினத்தந்தி 21 Oct 2018 1:14 AM GMT (Updated: 21 Oct 2018 1:14 AM GMT)

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்துள்ளது.

சென்னை,

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயம் என்ற நிலைக்கு வந்த பிறகு, ஒவ்வொரு நாளும் விலை அதிகரித்து வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றது.

இந்த நிலையில் கடந்த 18ந்தேதி பெட்ரோல் லிட்டருக்கு 22 காசு குறைந்து, ஒரு லிட்டர் 85 ரூபாய் 88 காசுக்கு விற்பனை ஆனது. நேற்று முன்தினமும் அதே விலையில் தான் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மீண்டும் விலை குறைந்தது. பெட்ரோல் லிட்டருக்கு 66 காசு குறைந்து, 85 ரூபாய் 22 காசுக்கு விற்பனை ஆனது.

பெட்ரோல் விலையை போலவே, டீசல் விலையும் கடந்த 18ந்தேதி குறைந்தது. நேற்றும் விலை குறைந்தே காணப்பட்டது. லிட்டருக்கு 24 காசு குறைந்து, ஒரு லிட்டர் டீசல் 79 ரூபாய் 69 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து விலை அதிகரித்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை இறங்குமுகத்தில் இருப்பதால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட லிட்டர் ஒன்றுக்கு 26 பைசா குறைந்து ரூ.84.96க்கு விற்பனையாகிறது.  இதேபோன்று டீசல் விலை 18 பைசா குறைந்து ரூ.79.51க்கு விற்பனை செய்யப்படுகிறது.  தொடர்ந்து இன்று 4வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது.

Next Story