பெட்ரோல் விலை 17 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது


பெட்ரோல் விலை 17 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது
x
தினத்தந்தி 12 Nov 2018 2:31 AM GMT (Updated: 12 Nov 2018 2:31 AM GMT)

பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகள் குறைந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று 80.56க்கு விற்பனையாகிறது.

சென்னை,

கிடுகிடு’வென உயர்ந்து வாகன ஓட்டிகளை பீதியடைய செய்த பெட்ரோல்-டீசல் விலை, கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தை சந்திக்க தொடங்கியது.

கடந்த மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.10-க்கும், டீசல் ரூ.80.04-க்கும் விற்பனை ஆனது. அதனைத் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று 80.73 ஆகவும், டீசல் விலை ரூ. 76.59-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் 17 காசுகள் குறைந்து இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 80.56 ஆகவும், டீசல் லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து, ரூ.76.43 ஆகவும் விற்பனையாகிறது. 

தொடர்ந்து  26-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைவை சந்தித்து வருகிறது. கடந்த 26 நாட்களில் பெட்ரோல் விலை ரூ. 5.54 -ம், டீசல் விலை ரூ.3.61-ம், குறைந்துள்ளது. 


Next Story