மாநில செய்திகள்

புயல் பாதித்த மாவட்டங்கள் உள்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு + "||" + Including storm-hit Districts In 7 Districts possibility of heavy rain

புயல் பாதித்த மாவட்டங்கள் உள்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

புயல் பாதித்த மாவட்டங்கள் உள்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.
சென்னை

சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் கூறி உள்ளதாவது:-

வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் டெல்டாமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை, நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.நாளை மற்றும் நாளை மறுநாள் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள்  தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

கடலூர், நாகை, திருவாரூர், சிவகங்கை,  தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.என கூறினார்