சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றியதற்கு எதிரான வழக்கில் நாளை உயர் நீதிமன்றம் தீர்ப்பு


சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றியதற்கு எதிரான வழக்கில் நாளை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
x

சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை பிற்பகல் தீர்ப்பு வழங்குகிறது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள பழங்கால கோவில்களில் சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு கடத்திச்சென்று ரூ.1,000 கோடிக்கும் மேல் சம்பாதித்ததாக கூறப்பட்ட புகாரில் சர்வதேச கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர், தீனதயாளன், துணை போலீஸ் சூப்பிரண்டு காதர்பாட்ஷா உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதில் அதிரடி திருப்பமாக சென்னை தொழில் அதிபர் ரன்வீர்ஷா, பெண் தொழில் அதிபர் கிரண் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் சூப்பிரண்டு அசோக்நடராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் ஆகியோர் அடங்கிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் கடும் நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். 

இந்த நிலையில், சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.  தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை பிற்பகல் தீர்ப்பு வழங்குகிறது.  நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பினை வழங்குகிறது.

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நாளை பணிஓய்வு பெற உள்ள நிலையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

Next Story