மாநில செய்திகள்

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல் + "||" + Rajinikanth To Attend Statue Unveiling Ceremony Of Karunanidhi, To Share Stage With Opposition Leaders: Sources

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சென்னை,

சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.


சிலை திறப்பு விழாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ஆகியோர்  பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அண்ணா அறிவாலயம் வளாகத்தில் நடைபெறும் திருவுருவச் சிலை திறப்பு விழா முடிவடைந்ததும், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் ரஜினிகாந்த் , கமல்ஹாசன் ஆகிய இருவரும் பங்கேற்க மாட்டார்கள் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோட்டில் நாளை மறுநாள் கருணாநிதி சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் ஏராளமானோர் பங்கேற்க தி.மு.க. கூட்டத்தில் முடிவு
ஈரோட்டில் வைக்கப்பட்டு உள்ள கருணாநிதி சிலையை மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (புதன்கிழமை) திறந்து வைக்கிறார். இதில் ஏராளமானோர் பங்கேற்க வேண்டும் என்று தி.மு.க. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
2. இளையராஜா விழாவில் ரஜினி, கமல்
தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிதி திரட்டவும் இசையமைப்பாளர் இளையராஜாவின் திரையுலக சாதனைகளை பாராட்டவும் ‘இளையராஜா 75’ என்ற பெயரில் கலைவிழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிப்ரவரி 2, 3 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. தயாரிப்பாளர் சங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
3. சபரிமலை விவகாரம் பாரம்பரியம் தொடர்புடையது: தேர்தல் கூட்டணிக்கு ரஜினி, கமல் வந்தால் சேர்ப்போம் - பிரதமர் மோடி பரபரப்பு பேட்டி
சபரிமலை விவகாரம் பாரம்பரியம் தொடர்புடையது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தேர்தல் கூட்டணிக்கு ரஜினி, கமல் வந்தால் சேர்ப்போம் என்றும் மோடி கூறினார்.
4. ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார்? ‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி தோற்றம் வெளியானது
‘பேட்ட’ படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி தோற்றம் வெளியானது. ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. ‘பேட்ட’ படத்தில் இளமை தோற்றம் - ரஜினியின் புதிய புகைப்படம் வெளியானது
பேட்ட படத்தில் இளமை தோற்றம் கொண்ட ரஜினியின் புதிய புகைப்படம் வெளியானது.