மாநில செய்திகள்

பள்ளி சுவரில் "ஐ லவ் யூ" என மாணவர்கள் எழுதியதால் 7 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் தற்கொலை முயற்சி + "||" + 7th grade students 5 suicide attempts

பள்ளி சுவரில் "ஐ லவ் யூ" என மாணவர்கள் எழுதியதால் 7 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் தற்கொலை முயற்சி

பள்ளி சுவரில் "ஐ லவ் யூ" என மாணவர்கள் எழுதியதால் 7 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் தற்கொலை முயற்சி
விழுப்புரம் அருகே பள்ளி வகுப்பறை சுவரில் தங்களது பெயர்களை எழுதியதால், 5 மாணவிகள் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,

விழுப்புரம் அருகே அரசம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 7--ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவர்கள் தங்களுடன் பயிலும்  5 மாணவிகளின் பெயர்களை  வகுப்பறையில் உள்ள போர்டில் எழுதி வைத்துள்ளனர். 

இதனால் மனவேதனை அடைந்த, அந்த மாணவிகள் அரளி விதை மற்றும் எலி மருந்தினை சாப்பிட்டு மயக்கமடைந்தனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், மாணவிகளை, சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து சங்கராபுரம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.