ஃப்ளாப் மூவிக்கான டிரெய்லர் போன்று இருந்தது கவர்னர் பன்வாரிலாலின் உரை - டி.டி.வி. தினகரன்
ஃப்ளாப் மூவிக்கான டிரெய்லர் போன்று இருந்தது கவர்னர் பன்வாரிலாலின் உரை என டி.டி.வி. தினகரன் கூறி உள்ளார்.
சென்னை,
சட்டப்பேரவை வளாகத்தில் எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆட்சி சிறப்பாக நடப்பதாக கவர்னர் உரையாற்றி இருப்பது உண்மைக்கு மாறாக உள்ளது. பல பிரச்சினைகளில் மாநில உரிமை பாதிப்பு என்று கவர்னரே கூறியிருக்கிறார். பேரவையில் கவர்னர் உரை சம்பிரதாய உரையாக உள்ளது. ஃப்ளாப் மூவிக்கான டிரெய்லர் போன்று இருந்தது கவர்னர் பன்வாரிலாலின் உரை.
தேர்தலுக்காக ஜெயலலிதாவின் பெயரை அதிமுகவினர் பயன்படுத்துகின்றனர். அமைச்சர்கள் அடிக்கடி டெல்லி செல்வதன் மர்மம் என்ன என்று டி.டி.வி தினகரன் கேள்வி எழுப்பினார். தமிழக அரசு என்னென்ன நலத்திட்டங்களை செய்தது என தெரியவில்லை. பொங்கல் பரிசாக தமிழக அரசு கொடுக்கும் ரூ.1000 மக்களுக்கு எந்த வகையிலும் பயன்படாது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருவாரூர் வேட்பாளர் ஜன.4-ல் அறிவிக்கப்படுவார் என்று கூறினார்.
Related Tags :
Next Story