கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு
கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை என சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
சென்னை,
சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில், மறைந்த 12 அவை உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேரவையில் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தீர்மானம் வாசித்துள்ளார். அவரது இரங்கல் குறிப்பில், கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை. இலக்கியம், கவிதை என அனைத்திலும் சிறப்புடன் பணியாற்றியவர்.
அவர் சமூக நீதிக்காக போராடியவர். தனது உடன்பிறப்புகளுக்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதியுள்ளார்.
சுதந்திர தினத்தில் மாநில முதல் அமைச்சர்கள் தேசிய கொடி ஏற்றும் உரிமையை பெற்று தந்தவர். அரசியல் எல்லையை கடந்து முன்னாள் முதல் அமைச்சர்களான மறைந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் கருணாநிதி மீது அன்பு கொண்டிருந்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story